×

பஸ் ஸ்டாண்டில் பிளாட் பார்ம் தூண்கள் பழுது: பயணிகள் செல்ல தடை

ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பிளாட் பார்மில் உள்ள 13 தூண்கள் பழுதடைந்துள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 பிளாட் பார்ம்கள் மூடப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வணிக கடைகள், நடைமேடைகள் ஆகியவை பழுதடைந்து வருவதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.35 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டு வளாகத்தில் நாமக்கல் பஸ்கள் நிற்கும் நடைமேடை மற்றும் டவுன் பஸ்கள் நிற்கும் நடைமேடை என 2 நடைமேடைகளில் உள்ள 13 தூண்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நடைமேடைகளுக்கும் பஸ்கள் மற்றும் பயணிகள் செல்லாத வகையில், மநகராட்சி நிர்வாகம் தடுப்புகளை அமைத்து மூடி வைத்துள்ளது. பழுதடைந்துள்ள தூண்களை பார்வையிட்டு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் ஆய்வு செய்தார். இது குறித்து மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பஸ் ஸ்டாண்டு புனரமைக்கும் பணி தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் உள்ள தூண்கள் மிகவும் பழுதடைந்து சரிந்து விழ வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கையாக தடுப்புகள் அமைத்து பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவடைந்ததும் பணிகள் துவங்கப்படும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்….

The post பஸ் ஸ்டாண்டில் பிளாட் பார்ம் தூண்கள் பழுது: பயணிகள் செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Erode ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...