×

செல்போன் கடையில் தீ விபத்து

ஆவடி: தாம்பரம், ராஜகீழ்ப்பாக்கம், வாசுகி தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (47). இவர், அம்பத்தூர் அடுத்த ஐசிஎப் காலனி கோபால்சாமி நகரில் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை சசிகுமார், செல்போன் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று கடையின் ஒரு பகுதியில் இருந்து தீ மளமளவென பற்றி எரிந்தது. அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார் ஆனால், முடியவில்லை. தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு அதிகாரி பக்தவச்சலம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வாகனத்துடன் விரைந்து வந்தனர். அரைமணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதில், கடையில் இருந்த செல்போன் உள்பட ரூ.5 லட்ச மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. போலீசார் விசார ணையில் தீ விபத்திற்கு மின்கசிவுதான் காரணம் என தெரியவந்துள்ளது….

The post செல்போன் கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Sasikumar ,Vasuki Street, Rajakeepakkam ,Tambaram ,ICF Colony Gopalsamy Nagar ,Ambattur ,Dinakaran ,
× RELATED எனக்கு எப்பவுமே அவரு தான் ஹீரோ! Soori Jolly Speech at Garudan Success Meet | Sasikumar | Vetrimaaran