×

இங்கிலாந்துடன் 3வது டெஸ்ட் 78 ரன்னில் சுருண்டது இந்தியா

லீட்ஸ்: இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் வெறும் 78 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹெடிங்லி மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் மார்க் வுட், டொமினிக் சிப்லிக்கு பதிலாக டேவிட் மலன், கிரெய்க் ஓவர்ட்டன் இடம் பெற்றனர். ரோகித், கே.எல்.ராகுல் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். ஆண்டர்சனின் துல்லியமான வேகப் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் டக் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த புஜாரா 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இந்தியா 4 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. கடும் நெருக்கடியுடன் உள்ளே வந்த கேப்டன் கோஹ்லி 7 ரன் எடுத்து ஆண்டர்சன் வேகத்தில் பலியாக, இந்தியா 10.5 ஓவரில் 21 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.இந்த நிலையில், ரோகித் – ரகானே ஜோடி பொறுப்புடன் பொறுமையாக விளையாடி 4வது விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்தது. ரகானே 18 ரன் எடுத்து (54 பந்து, 3 பவுண்டரி) ராபின்சன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் பிடிபட்டார். அடுத்து வந்த ரிஷப் பன்ட் 2 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இக்கட்டான சூழ்நிலை காரணமாக, மிக நிதானமாக விளையாடிய ரோகித் 19 ரன் எடுத்த நிலையில் (105 பந்து, 1 பவுண்டரி) ஓவர்ட்டன் பந்துவீச்சில் ராபின்சன் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முகமது ஷமி (0), ரவீந்திர ஜடேஜா (4), ஜஸ்பிரித் பும்ரா (0) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து அணிவகுக்க, இந்தியா 36.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 67 ரன் என்ற நிலையில் இருந்து 37.3 ஓவரில் 67 ரன்னுக்கு 9 விக்கெட் என நிலைகுலைந்தது. கடைசி விக்கெட்டுக்கு இஷாந்த் – சிராஜ் இணைந்து 11 ரன் சேர்த்தனர். சிராஜ் 3 ரன்னில் வெளியேற, இந்தியா முதல் இன்னிங்சில் 78 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (40.4 ஓவர்). இந்திய அணி 22 ரன்னுக்கு கடைசி 7 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன், ஓவர்ட்டன் தலா 3, ராபின்சன், சாம் கரன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்து வருகிறது.  இந்தியா முதல் இன்னிங்ஸ்ரோகித் ஷர்மா    (சி) ராபின்சன் (பி) ஓவர்ட்டன்    19கே.எல்.ராகுல்    (சி) பட்லர் (பி) ஆண்டர்சன்    0செதேஷ்வர் புஜாரா    (சி) பட்லர் (பி) ஆண்டர்சன்    1விராத் கோஹ்லி    (சி) பட்லர் (பி) ஆண்டர்சன்    7அஜிங்க்யா ரகானே    (சி) பட்லர் (பி) ராபின்சன்    18ரிஷப் பன்ட்    (சி) பட்லர் (பி) ராபின்சன்    2ரவீந்திர ஜடேஜா    எல்பிடபுள்யு (பி) சாம் கரன்    4முகமது ஷமி    (சி) பர்ன்ஸ் (பி) ஓவர்ட்டன்    0இஷாந்த் ஷர்மா    (ஆட்டமிழக்கவில்லை)    8ஜஸ்பிரித் பும்ரா    எல்பிடபுள்யு (பி) சாம் கரன்    0முகமது சிராஜ்    (சி) ரூட் (பி) ஓவர்ட்டன்    3உதிரிகள்        16மொத்தம்    (40.4 ஓவர், ஆல் அவுட்)    78விக்கெட்  வீழ்ச்சி: 1-1, 2-4, 3-21, 4-56, 5-58, 6-67, 7-67, 8-67, 9-67, 10-78.இங்கிலாந்து பந்துவீச்சு: ஆண்டர்சன் 8-5-6-3, ராபின்சன் 10-3-16-2, சாம் கரன் 10-2-27-2, மொயீன் அலி 2-0-4-0, கிரெய்க் ஓவர்ட்டன் 10.4-5-14-3….

The post இங்கிலாந்துடன் 3வது டெஸ்ட் 78 ரன்னில் சுருண்டது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,England ,Leeds ,Headingley… ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…