×

ரூ.494.60 கோடியில் தலைமதகுடன் கதவணை வீராணம் நீர் சென்னை குடிநீருக்கு பயன்படும்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை: தமிழக அரசின் நீர்வளத்துறை மானியக்கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பதாவது: கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர் மற்றும் மயிலாடுதுறை (நாகப்பட்டினம்) மாவட்டங்களில் ஆதனூர் மற்றும் குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே ரூ.494.60 கோடி செலவில் தலைமதகுடன் கூடிய புதிய கதவணை அமைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கட்டுமான பணிகளுக்கு ரூ.463.25 கோடி மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு ரூ.31.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 84.72 ஹெக்டேர் பட்டா நிலங்கள் மற்றும் 12.898 ஹெக்டேர் புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் வருவாய்த்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 31,221  ஏக்கர் நிலங்கள் மற்றும் அருகில் உள்ள கிணறுகளில் நீர் செறிவூட்டுதல் மூலம் பயன்பெறும் 4411 ஏக்கர் நிலங்களும் உள்ளடங்கும். இத்திட்டங்களால் சேமிக்கப்படும் நீரானது வீராணம் ஏரிக்கும் கொண்டு செல்லப்பட்டு சென்னை மாநகர குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்படும். * சட்டப்பேரவையில் இன்று…தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரும் பதில் அளித்து பேசுவார்கள்….

The post ரூ.494.60 கோடியில் தலைமதகுடன் கதவணை வீராணம் நீர் சென்னை குடிநீருக்கு பயன்படும்: அமைச்சர் துரைமுருகன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kathavanai ,Chennai ,Thalimathak ,Minister ,Duraimurugan ,Tamil Nadu government ,resources ,Cuddalore ,Kollidam ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?