×

ரூ.1417.72 கோடி மதிப்பீட்டிலான 6211 குடிமராமத்து பணிகளில் 5,866 பணிகள் நிறைவு

சென்னை: நீர்வளத்துறை மானியக்கோரிக்கை கொள்கை விளக்க கூறிப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பதாவது: 2016-17ம் ஆண்டில், 30 மாவட்டங்களில் ரூ.99.49 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் வழங்கப்பட்ட 1,513 குடிமராமத்து பணிகளில் 1512 பணிகள் முடிக்கப்பட்டு, ஒரு பணி கைவிடப்பட்டது. 2017-18ம் ஆண்டு 30 மாவட்டங்களில் ரூ.321.27 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் வழங்கப்பட்ட 1479 குடிமராமத்து பணிகளில், 1,472 பணிகள் முடிவுற்றுள்ளன. 2 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன மற்றும் 5 பணிகள் கைவிடப்படவுள்ளன. 2019-20ம் ஆண்டு மாவட்டங்களில் ரூ.498.44 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் வழங்கப்பட்ட 1,832 குடிமராமத்து பணிகளில், 1,797 பணிகள் முடிவுற்றுள்ளன, 15 பணிகள் முன்னேற்றத்தில் உள்ள மற்றும் 20 பணிகள் கைவிடப்பட உள்ளன. 2020-21ம் ஆண்டு 34 மாவட்டங்களில் ரூ.498.52 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் வழங்கப்பட்ட 1387 குடிமராமத்து பணிகளில் 1085 பணிகள் முடிவுற்றுள்ளன. 248 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. 54 பணிகள் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட உள்ளன. மொத்தம் ஒப்புதல் வழங்கப்பட்ட ரூ.1417.72 கோடி மதிப்பீட்டிலான 6211 குடிமராமத்து பணிகளில் 5,866 பணிகள் முடிவுற்றுள்ளன. 265 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. 1 பணி கைவிடப்பட்டது. 79 பணிகள் பல்வேறு காரணங்களால் கைவிடப்படவுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post ரூ.1417.72 கோடி மதிப்பீட்டிலான 6211 குடிமராமத்து பணிகளில் 5,866 பணிகள் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Durai Murugan ,Water Resources Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும்...