×

இந்தியாவில் முதல் மாநிலமாக புதிய கல்வி கொள்கை கர்நாடகாவில் அமல்: முதல்வர் பசவராஜ் பொம்மை பெருமிதம்

பெங்களூரு: கொரோனா பரவல் குறைந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 9, 10 மற்றும் பியூ கல்லூரிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிகளில் மாணவ, மாணவிகளை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். இந்நிலையில், பெங்களூரு  விதான சவுதாவில் தேசிய  கல்வி கொள்கை- 2020 மற்றும் புதிய கல்வி கொள்கையை  வகுத்த அறிஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. ஒன்றிய அரசின் கல்வித்துறை  அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இவ்விழாவில்  முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது: “ஆகஸ்ட் 23  கல்வி நாளாக  மாறிவிட்டது. 18 மாதத்திற்கு பிறகு மாநிலத்தில் பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட  நிலையில் புதிய கல்வி கொள்கையும் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. தேசிய  புதிய கல்வி கொள்கையின்படி மாணவ மாணவிகள் தங்களுக்கு விரும்பிய பாடங்களை  தேர்வு செய்து கொள்ள முடிகிறது. தேசிய அளவில் கர்நாடகா, புதிய கல்வி  கொள்கையை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது’’,  என்றார்….

The post இந்தியாவில் முதல் மாநிலமாக புதிய கல்வி கொள்கை கர்நாடகாவில் அமல்: முதல்வர் பசவராஜ் பொம்மை பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,India ,Chief Minister ,Basavaraj Boyam Perumidham ,Bengaluru ,PU ,Corona ,
× RELATED கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில்...