×

வேலூர் சாயிநாதபுரத்தில் பாதாள சாக்கடை தொட்டியில் விழுந்த எருமைகள் மீட்பு

வேலூர் : வேலூர் சாயிநாதபுரத்தில் தோண்டப்பட்டிருந்த பாதாள சாக்கடை தொட்டி மற்றும் பள்ளத்தில் விழுந்த 3 எருமை மாடுகளை மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.வேலூர் சாயிநாதபுரம் வள்ளலார் நகர் முதல் மெயின் ரோடு பகுதியில் மாநகராட்சியின் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இதில் இரு சாலைகள் சந்திக்கும் பகுதியில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதில் சிமென்ட் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. தொட்டியை சுற்றிலும் மண் நிரப்பப்படாததால் பள்ளம் இருந்தது. இப்பள்ளத்தை சுற்றிலும் எந்த தடுப்பும் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சுற்றி வந்த 3 எருமை மாடுகள் அடுத்தடுத்து அந்த பள்ளம் மற்றும் தொட்டியில் விழுந்தன.இரவு முழுவதும் பள்ளத்தில் சிக்கி தவித்த எருமைகளை நேற்று காலை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்புத்துறையினர் இணைந்து ஒரு மணி நேரத்துக்கும் மேல் போராடி மூன்று எருமைகளையும் மீட்டனர். இந்நிலையில் இப்பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post வேலூர் சாயிநாதபுரத்தில் பாதாள சாக்கடை தொட்டியில் விழுந்த எருமைகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Vellore Sainathapuram ,Vellore ,
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...