×

105-வது நாளாக தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டம்: சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பஞ்சாப் விவசாயி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் ஒரு விவசாயி உயிரிழந்தார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர், டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் இந்த போராட்டம் 105 வது நாளை எட்டியுள்ளது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, போராட்ட களங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், போராட்ட களத்துக்கு புதிதாக விவசாயிகள் வருவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் விவசாயிகள் தங்களின் டிராக்டர்களையே வீடுகளாக மாற்றி தங்கி, சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்கின்றனர். இதில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்யாத வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் உடல்நிலை பாதிப்பு, தற்கொலை, மர்மச்சாவுகள் என இதுவரையில் 250-க்கும் அதிகமானோர் பேர் வரை இறந்துள்ளனர். இந்நிலையில் சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பஞ்சாப் சபோ தல்வாண்டியைச் சேர்ந்த பல்தேவ் சிங் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதன் மூலம் இதுவரை பலியான விவசாயிகளின் எண்ணிக்கை 287-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக மார்ச் 13-ம் தேதி மீண்டும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. …

The post 105-வது நாளாக தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டம்: சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பஞ்சாப் விவசாயி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Singhu ,Delhi border ,central government ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...