×

ஊரடங்கில் ரூ.36 ஆயிரம் கோடி போச்சு… பயணிகள் ரயில்களால் எப்பவும் நஷ்டம்தான்: ஒன்றிய அமைச்சர் புலம்பல்

ஜல்னா: ‘கடந்தாண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் ரூ.36 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’ என்று ரயில்வே இணை அமைச்சர்  ராவ் சாகேப் தன்வ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னாவில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ரயில்வே இணையமைச்சர் ராவ் சாகேப் தன்வ் கலந்து கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது: பயணிகள் ரயில் சேவையால் அரசு எப்போதும் இழப்பையே சந்தித்து வருகிறது. கட்டணத்தை உயர்த்துவது பொதுமக்களை பாதிக்கும். அதனால், கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசால் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டுமே பயணிகள் ரயில்களால்  ரூ.36 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், சரக்கு ரயில்கள் அரசுக்கு போதுமான வருவாயை பெற்றுத் தருகின்றன. ஊரடங்கிலும் சரக்கு ரயில் சேவையால் எந்த இழப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்….

The post ஊரடங்கில் ரூ.36 ஆயிரம் கோடி போச்சு… பயணிகள் ரயில்களால் எப்பவும் நஷ்டம்தான்: ஒன்றிய அமைச்சர் புலம்பல் appeared first on Dinakaran.

Tags : Union minister ,Jalna ,Minister of Railways ,
× RELATED சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம்...