×

உலக யு20 தடகளம் நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் ஷைலி சிங்

நைரோபி: உலக யு20 தடகள போட்டியின் மகளிர் நீளம் தாண்டுதலில்  இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். கென்யா தலைநகர் நைரோபியில் நேற்று நடைபெற்ற பைனலில் அபாரமாக செயல்பட்ட ஷைலி (17 வயது) 6.59 மீட்டர் தூரம் தாண்டி 2வது இடம் பிடித்தார். ஸ்வீடனின் மஜா அஸ்காக் (6.60 மீ.) தங்கப் பதக்கமும், உக்ரைன் வீராங்கனை மரியா ஹோரிலோவா (6.50 மீ.) வெண்கலமும் வென்றனர். இந்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கம் இது. உத்தரப்பிரதேசம் ஜான்சியை சேர்ந்த ஷைலி வெறும் 1 செ.மீட்டரில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. இவர் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் முன்னாள் நட்சத்திரம் அஞ்சு பாபி ஜார்ஜ் மற்றும் அவரது கணவர் ராபர்ட் பாபி ஜார்ஜிடம் பயிற்சி பெற்றவராவார். முன்னதாக, கலப்பு  4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் மற்றும் 10,000 மீட்டர் ஆடவர் நடை பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் (அமித் கத்ரி) கிடைத்திருந்தது. மகளிர் 4X400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் பைனலில் நேற்று பங்கேற்ற பாயல் வோரா, சம்மி, ரஹ்ஜிதா, பிரியா மோகன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 4வது இடம் பிடித்து நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை நழுவவிட்டது. இத்தொடரில் இந்தியா 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 3 பதக்கங்களை வென்று 21வது இடம் பிடித்தது. …

The post உலக யு20 தடகளம் நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் ஷைலி சிங் appeared first on Dinakaran.

Tags : Shaili Singh ,World U20 Athletics ,Nairobi ,World ,U20 Athletics ,Dinakaran ,
× RELATED கென்யாவில் போலீஸ் துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலி