×

ரேபிஸ் தடுப்பூசி போடாததால் பரிதாபம் வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன் பலி

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த அகரமேல் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் அந்த வழியாக சென்ற சிறுவர்கள் சிலரை கடித்து குதறியது. இதில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் ரேபிஸ் நோய் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டனர். இதில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மகன் மோனிஷ்(7) என்ற சிறுவனும் வெறிநாய் கடிக்கு ஆளானான். இதில் சிறுவனின் முகம் உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. பெற்றோர் சிறுவனுக்கு தடுப்பூசி ஏதும் போடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு மாதத்திற்கு பின்பு சிறுவனுக்கு திடீரென நாயை போன்று நாக்கில் இருந்து எச்சில் ஊற்றியதாகவும், தண்ணீரை கண்டால் ஓடுவது, நாயை போல குறைப்பது உள்ளிட்ட சுபாவங்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பயந்து போன பெற்றோர் மோனிஷை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மோனிஷ் ரேபிஸ் நோய் தாக்கி நேற்று பரிதாபமாக இறந்தான். இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் மற்றும் சிறுவன் யாருடன் எல்லாம் பழகினான் என கணக்கெடுத்து அவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறிநாய் கடித்த ஒரு மாதத்திற்கு பின்பு சிறுவன் ரேபிஸ் நோய் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அகரமேல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வெறி நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிவதால் அதனை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post ரேபிஸ் தடுப்பூசி போடாததால் பரிதாபம் வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Akaramel ,
× RELATED நிர்வாண நிலையில் கை, கால்கள்...