×

மலேசிய புதிய பிரதமருக்கு பக்க பலமாய் நிற்போம்:இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அறிவிப்பு

சென்னை: மலேசிய புதிய பிரதமருக்கு பக்க பலமாய் நிற்போம் என்று இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் ெதரிவித்துள்ளார். இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் வெளியிட்ட அறிக்கை: மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி பதவிப் பிரமாணம் ஏற்றிருக்கிறார். உண்மையில் நாட்டின் பெரிய மாநிலமான பகாங்கிற்கு இஸ்மாயில் பெருமையை தேடித் தந்திருக்கிறார். அந்த மாநிலத்தில் இருந்து நாட்டின் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மூன்றாவது தலைவர் இவர். இரண்டாவது பிரதமர் துன் ரசாக்கும் ஆறாவது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பும் மேற்கு மண்டல மாநிலமான இதே பகாங்கைச் சேர்ந்தவர்கள். புதிய பிரதமர் பொறுப்பேற்றுள்ளதால் கொரோனா பரவலால் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சுகாதாரப் பணிகள் தொய்வின்றி தொடரும். அதேபோல பொருளாதார மீட்சி நடவடிக்கையும் புது உத்வேகம் பெறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. மலேசிய வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுத புறப்பட்டிருக்கும் அன்னாருக்கு நாமும் பக்கபலமாய் தக்கத்துணையாய் உடன் நிற்போம். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post மலேசிய புதிய பிரதமருக்கு பக்க பலமாய் நிற்போம்:இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Malaysia ,Indian Haj Association ,CHENNAI ,President ,Abubakar ,Prime Minister of ,Dinakaran ,
× RELATED போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார்...