×

விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை: முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை..!

விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கை விரைந்து விசாரணை நடத்தி டிசம்பர் 20ம் ேததிக்குள் முடிக்க வேண்டும் எனவும், இதுதொடர்பான அறிக்கையை டிசம்பர் 23ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என விழுப்புரம் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி சுப்ரீம் கோட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் சட்டப்படி விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெறலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் நேரில் ஆஜரானார். முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. அவரது சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, சிறப்பு டிஜிபி வராதது குறித்து விளக்கம் அளித்தனர். இந்நிலையில் எஸ்பி கண்ணன் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும், வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை தரக்கோரியும் மனுதாக்கல் செய்துள்ளார். இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்….

The post விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை: முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை..! appeared first on Dinakaran.

Tags : Vilapuram Court ,Former Special DGB ,Viluppuram ,Tamil Nadu ,Chengalpatu ,SP ,Kannan ,Vilappuram Court ,Dinakaran ,
× RELATED கடலில் படகு கவிழ்ந்தது மீனவர் மாயம்