×

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம், ஜெயலலிதா இறப்பிற்கு நீதி திமுக ஆட்சியில் உறுதியாக கிடைக்கும் :செல்வபெருந்தகை பேட்டி!!

சென்னை : காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் c சட்டப்பேரவை வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ‘கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் விபத்தில் மரணமடைந்துள்ளார்கள்.  ராஜேஷ்குமார் நாவல் போன்று பல்வேறு மர்மங்கள் இதில் உள்ளன.கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பிற்கு நீதி திமுக ஆட்சியில் உறுதியாக கிடைக்கும். கொடநாடு விவகாரத்தில் அதிமுக தலைவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள்? எதற்கு இந்த அளவு பதற்றம் அடைகிறார்கள். 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது. ஆனால், கடந்த சில நாட்களாக இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் ஒரு கவலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கோரி மனு  அளித்துள்ளள்ளோம். இதற்கு பேரவைத் தலைவர் அனுமதிக்க ஏழு நாட்கள் உள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்பதால் இதனை சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரக்கூடாது என பேட்டி அளித்துள்ளார். பின்னர் இவர்கள் ஏன் ஊடகத்தை சந்தித்து கொடநாடு விவகாரம் தொடர்பாக பேட்டி அளிக்கிறார்கள். ஆளுநரிடம் சந்தித்து கோரிக்கை வைக்கிறார்கள். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் ஏன் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்<' என கேள்வி எழுப்பினார். கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் விபத்தில் மரணமடைந்துள்ளார்கள். ராஜேஷ்குமார் நாவல் போன்று பல்வேறு மர்மங்கள் இதில் உள்ளது. கொடநாடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷ்குமார் தற்கொலை செய்து கொள்கிறார். அவர் தற்கொலை செய்து கொண்ட லுங்கி அவருடையது இல்லை என தினேஷ்குமார் தங்கையே தெரிவித்துள்ளார். இவ்வாறு அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளது. 90 நாட்கள் பிணையில் வந்த மனோஜும், சயனும் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிநார்கள். அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் அவர்கள் மீது தமிழக அரசு எதனால் குண்டர் சட்டத்தில் கைது செய்தது. அதிமுகவினர்களுக்கு எதற்கு இந்த பயம் எதற்கு இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா மரணம் குறித்து உண்மை வெளிவரும். நாட்டு மக்களும் அதனையே எதிர்பார்க்கின்ரனர். அதிமுக தொண்டர்களும் அதனை எதிர் பார்க்கின்றனர்.   சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து பேச தயங்குவது ஏன்?இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் மன்றத்தில் பேசவும் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் இந்த அரசு நீதி வழங்கும் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவே தாங்கள் கருதுகிறோம். இவ்வாறு பேசினார்….

The post கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம், ஜெயலலிதா இறப்பிற்கு நீதி திமுக ஆட்சியில் உறுதியாக கிடைக்கும் :செல்வபெருந்தகை பேட்டி!! appeared first on Dinakaran.

Tags : Koda Nadu ,Jayalalithaa ,DMK ,Selvaperunthakai ,Chennai ,Congress party ,Assembly ,Kodanad ,
× RELATED கொடநாடு வழக்கு ஊட்டி கோர்ட்டில் அறிக்கை தாக்கல்