×

ஈரோட்டில் ஒரேநாளில் 12 காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்

பவானி: ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் காவல் நிலையங்களில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 12 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். ஆடி முடிந்து ஆவணி மாதம் தொடங்கி 6 நாள் ஆகிறது. ஆவணி மாதத்தின் முகூர்த்த நாளான நேற்று முன்தினம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அதிகளவு திருமணங்கள் நடந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து 7 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர். தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கோரி வந்ததாக கூறினர். அடுத்தடுத்து வந்த காதல் ஜோடிகளை பார்த்து மகளிர் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.இதேபோல், 2 காதல் ஜோடிகள் பவானி போலீசில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். இதையடுத்து போலீஸ் விசாரணையில், காதல் ஜோடிகள் அனைத்தும் மேஜர் என்பது தெரியவந்தது. இதனால், மகளிர் போலீசார், காதலர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். இதில், 3 காதல் ஜோடிகளின் திருமணத்தை இருதரப்பிலும் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். 4 ஜோடிகளின் திருமணத்தை பெண்ணின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், காதலன் மற்றும் அவரது உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். பவானி காவல் நிலையத்தில் 2 திருமண ஜோடிகளும் மேஜர் என்பதால், காதலர்கள் விருப்பப்படி வாழ அவர்களின் உறவினர்களுடன் அனுப்பப்பட்டனர்.இதேபோன்று, அந்தியூர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து 3 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தன. அவர்களின் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், காதலர்கள் மேஜர் என்பதால், விருப்பப்படி வாழ அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் அடுத்தடுத்து 12 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்ததால் பவானி, அந்தியூர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பரபரப்பு நிலவியது….

The post ஈரோட்டில் ஒரேநாளில் 12 காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Erote ,Bhavani ,Antheur police stations ,Erode district ,Com Station ,Dinakaran ,
× RELATED ரத்னம் விமர்சனம்