×

சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து தாது மணல் கடத்தல் விவி நிறுவன உரிமையாளர் மீது வழக்கு: சூபர்வைசர் உள்பட 6 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விவி நிறுவனத்தின் சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து தாது மணல் கடத்திய விவகாரத்தில் குடோன் சூபர்வைசர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக விவி நிறுவன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள வி.வி. டைட்டானியம் பிக்மெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் லாரிகளில் இல்மனைட் தாது மணல் ஏற்றிச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு லாரியில் வெறும் சாக்கு மூட்டைகள் மட்டுமே இருந்தது. மற்ற 4 லாரிகளில் தலா 10 டன் வீதம் 40 டன் தாது மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.  இந்த 5 லாரிகளையும் சிப்காட் போலீசார் கைப்பற்றினர். கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்பி ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, முத்தையாபுரத்தில் தாது மணலுடன் சீல் வைக்கப்பட்டிருந்த குடோன் திறந்திருந்தது தெரிய வந்தது. நள்ளிரவில், இது குறித்து மீளவிட்டான் கிராமம்-1 நிர்வாக அதிகாரி ராஜேஷ்கண்ணா புகாரின்படி, விவி நிறுவன உரிமையாளர், 5 லாரி டிரைவர்கள் மற்றும் சிலர் மீது சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் லாரி டிரைவர்களான இசக்கி(49), மாரிமுத்து(39), முருகன்(49), சடையாண்டி(39), செல்வம்(51) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் முத்தையாபுரம் துறைமுக ரோட்டில் உள்ள விவி.குடோன் சூபர்வைசரான கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு சூரங்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(41) என்பவரையும் கைது செய்தனர். விவி நிறுவன உரிமையாளர்  உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர். நேற்று தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின் செல்லத்துரை முன்னிலையில் அந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. …

The post சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து தாது மணல் கடத்தல் விவி நிறுவன உரிமையாளர் மீது வழக்கு: சூபர்வைசர் உள்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : VV ,Thoothukudi ,VV Company ,Tuticorin ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது