×

பங்குனி மாத பூஜை, ஆறாட்டு திருவிழா: சபரிமலை கோயில் நடை 14ல் திறப்பு

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைகள், ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி திறக்கப்படுகிறது. பங்குனி மாத பூஜைகள், ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. ெதாடர்ந்து 10 நாள் ஆறாட்டு திருவிழாவும் நடக்கிறது. 19ம் தேதி காலை 7.15 மணியில் இருந்து 8 மணிக்கு இடையே, தந்திரி கண்டரர் ராஜீவரரு தலைமையில் திருவிழா திருக்கொடியேற்றம் நடக்கிறது. 27ம் ேததி இரவு சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது. 28ம் தேதி பம்ைபயில் ஆறாட்டுடன் திருவிழா நிறைவைடகிறது. அன்று இரவு கோயில் நடை சாத்தப்படுகிறது.பங்குனி மாத பூஜைகள், ஆறாட்டு திருவிழாவையொட்டி வரும் 14 முதல் 28ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். 15 முதல் 28ம் தேதி வரை தினமும் 5,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இதற்கான ஆன்ைலன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு ெதாடங்குகிறது. ‘sabarimalaonline.org’ இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். தரிசனத்துக்கு ெசல்லும் ேபாது 48 மணி நேரத்துத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சான்றிதழை வைத்திருக்க ேவண்டும். நிலக்கல் பகுதியில் இதற்கான பரிசோதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது….

The post பங்குனி மாத பூஜை, ஆறாட்டு திருவிழா: சபரிமலை கோயில் நடை 14ல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Panguni Month Pooja ,Arattu Festival ,Sabarimala Temple Walk 14 ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan Temple ,Panguni ,Arattu ,Panguni… ,Panguni Mata Pooja ,Arattu Festival: Sabarimala Temple Opening ,Walk 14 ,
× RELATED சபரிமலையில் துவங்கியது ஆராட்டு...