×

தீவனத்திற்கான தேவை அதிகரிப்பால் சோயா நேரடி உற்பத்தியில் கோழிப்பண்ணையாளர்கள் ஆர்வம்

மோகனூர்: மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒருவந்தூர், நல்லம்பாளையம், செவந்திபாளையம், அரசுநத்தம், பரளி, ஆரியூர், வாழவந்தி, பெரமாண்டபாளையம், புளியம்பட்டி, அணியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் பெரும்பாலும் மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பண்ணையாளர்கள் வாங்குகின்றனர். ஒரு கிலோ சோயா ₹105 என வாங்குகின்றனர். கோழித்தீவனத்தில் சோயா தேவை அதிகம் இருப்பதால் சோயாவை கோழிப்பண்ணையாளர்கள் தாங்களாவே தயாரிக்க முன்வந்துள்ளனர். மோகனூரை அடுத்த பரளி மற்றும் மாமரத்துப்பட்டியில் சுமார் 10 ஏக்கர் பரப்பில் சோயா பயிரிடப்பட்டுள்ளது. சோயாவை விவசாயிகளும் பயிரிட்டு, தங்களுக்கு வழங்க வேண்டும் என கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: கோழிகளுக்கு முக்கிய தீவனமான சோயாவை, கோழிப்பண்ணையாளர்களே உற்பத்தி செய்ய முயன்றுள்ளோம். மோகனூர் அருகில் பரளி மற்றும் மாமரத்துபட்டியில் சோயாவை பயிரிட்டுள்ளோம். 90 நாட்கள் பயிரான சோயாவை ஊடுபயிராகவும் பயிரிடலாம். விவசாயிகள் முன்வந்து சோயாவை பயிரிடவேண்டும். சோயா பயிரிட்டால் மண் சத்தின் தன்மை அதிகரிக்கும். கரும்பு, வாழை, மரவள்ளி கிழங்கு பயிரிடும் போது, ஊடுபயிராகவும் சோயா பயிரிடலாம். சோயா பயிரிட்டு விலை குறைந்தால், விவசாயிகள் அவற்றை பாதுகாப்பாக வைத்து, விலை உயர்ந்த பின்பும் விற்க முடியும். விவசாயிகள் பயிரிட்ட சோயாவை கோழிப்பண்ணையாளர்களே வாங்கிக கொள்ள தயாராக உள்ளோம். மேலும், அடுத்த ஆண்டு 1000 ஏக்கரில் சோயாவை பயிரிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்….

The post தீவனத்திற்கான தேவை அதிகரிப்பால் சோயா நேரடி உற்பத்தியில் கோழிப்பண்ணையாளர்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Oruvantur ,Nallampalayam ,Sevandipalayam ,Varshavantham ,Parali ,Auriyur ,Vazhavanthi ,Peramandapalayam ,Puliyampatti ,Aniyapuram ,
× RELATED தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு