×

சித்தூர் எம்.எஸ்.ஆர் சர்க்கிள் அருகே கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து சுகாதார சீர்கேடு: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சித்தூர்: சித்தூர் எம்.எஸ்.ஆர் சர்க்கிள் அருகே ஆபத்தான நிலையில் திறந்து பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ள கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சித்தூர் எம்.எஸ்.ஆர் சர்க்கிள் அருகே தினமும் ஆயிரக்கணக்காண பொதுமக்கள் பணிநிமித்தமாகவும், மார்க்கெட் மற்றும் பஜார்களுக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு சென்று வருபவர்கள் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கிறது. அவ்வாறு திறந்து கிடக்கும் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்பவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: சித்தூர் மாநகரத்தில் முக்கிய பகுதியான எம்.எஸ்.ஆர் சர்க்கிள் உள்ளது. இந்த சர்க்கிள் வழியாக சித்தூர் நகர மக்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து வரும் பொதுமக்கள் மார்க்கெட், வணிக வளாகங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகள் இந்த சர்க்கிளில் நிறுத்தி செல்கிறது. இதனால் பேருந்துகளில் செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் நடந்து செல்லும்போது சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் கால்வாயை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்….

The post சித்தூர் எம்.எஸ்.ஆர் சர்க்கிள் அருகே கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து சுகாதார சீர்கேடு: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chittoor MSR circle ,Chittoor ,Chittoor MSR ,Dinakaran ,
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...