×

குடலிறக்க அறுவை சிகிச்சை மற்றும் வயிற்று சுவர் சீரமைப்பு மையம் துவக்கம் தமிழகத்தில் 60 கிராமங்களில் 100% தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை மற்றும் வயிற்றுச் சுவர் சீரமைப்பு மையம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் 60 கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.  சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குடலிறக்க அறுவை சிகிச்சை மற்றும் வயிற்றுச் சுவர் சீரமைப்பு மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன்  பேசுகையில், ‘‘தமிழகத்தில் 6 கோடி பேருக்கு 12 கோடி தடுப்பூசி செலுத்த  வேண்டும். தற்போது மிக விரைவில் 3 கோடி அளவில் தடுப்பூசி செலுத்தும்  வகையில் விரைந்து தடுப்பூசிகளை செலுத்தி வருகிறோம். தமிழகத்தில் 60 கிராமங்களில் 100% தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.  அதைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையின் ரத்தமில்லா அறுவை சிகிச்சை பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகரும், பேரியாட்ரிக் அன்ட் ரோபோடிக் சிகிச்சை நிபுணருமான டாக்டர் பிரேம்குமார் பாலச்சந்திரன் கூறுகையில், ‘‘வென்ட்ரல் ஹெர்னியா மேனேஜ்மென்ட் என்று அழைக்கப்பட்ட கீறல் குடலிறக்க சிகிச்சையானது தற்காலங்களில் வயிற்று சுவர் மறு சீரமைப்பு என்று அழைக்கப்படலாயிற்று. சிக்கலான மறு சீரமைப்புகள், வயிற்றுச் சுவர் உள்பகுதி பிரிப்பு அறுவை சிகிச்சைகள், வழக்கமான குரோயின் மற்றும் வென்ட்ரல் ஹெர்னியா  பிரச்னைகள்  ஆகியனவற்றை நவீன லேபரோஸ்கோபிக் மற்றும் ரோபோட்டிக் சிகிச்சை முறைகள் மூலமாக மிகவும் குறைவான குருதி சேதத்துடன் மிகவும் மேம்பட்ட முறையில் சிகிச்சை மேற்கொள்ள இயலும். ஸ்கோலா, லேப்ரோஸ்கோபிக் இ டெப் மற்றும் டர் டார்ம், இபோம் மற்றும் இபோம் பிளஸ்  சிகிச்சை முறைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நவீன தொழில் நுட்ப சிகிச்சை முறைகள் இந்த மையத்தில் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன’’ என்றார்….

The post குடலிறக்க அறுவை சிகிச்சை மற்றும் வயிற்று சுவர் சீரமைப்பு மையம் துவக்கம் தமிழகத்தில் 60 கிராமங்களில் 100% தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Ma. Subharamanyan ,Chennai ,Centre for Herniasis Surgery and Abdominal Wall Alignment ,Ampolo Hospital ,Ma. ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...