×

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக பாசன வாய்க்காலில் ஆனந்த குளியல் போடும் இளைஞர்கள்

கரூர்: வெயிலை சமாளிக்க பாசன வாய்க்காலில் குளித்து மகிழ்வதை சிறுவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையம் பகுதியில் இருந்து குளித்தலை வரை காவிரி ஆறு செல்கிறது. இந்த ஆற்றுப்பகுதியை ஒட்டி பல்வேறு வாய்க்கால்கள் பிரிந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள தடுப்பணையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பாசன வாய்க்கால்கள் செல்கின்றன. கரூர் மாவட்டத்தில் சுற்றுலா தலமாக விளங்கி வரும் மாயனூர் பகுதியில் அம்மா பூங்காவும் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில், இந்த பகுதியை சேர்ந்தவர்களும், பல்வேறு பகுதிகளில் இருந்து மாயனூர் கதவணை பகுதிக்கு வருபவர்களும் வெயிலை சமாளிக்கும் வகையில் காவிரி பாசன வாய்க்கால்களில் குளித்து நீராடி சென்று வருகின்றனர். பாசன வாய்க்கால்களில் தற்போது தண்ணீர் செல்வதால், சிறுவர், சிறுமிகள் ஆனந்தமாக வாய்க்காலில் குதித்து விளையாடி மகிழ்ந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post கொளுத்தும் வெயிலுக்கு இதமாக பாசன வாய்க்காலில் ஆனந்த குளியல் போடும் இளைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Karur ,Tavittipalayam ,Dinakaran ,
× RELATED கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது