×

ரேஷன் கடை ஸ்கேனர் கருவி அடிக்கடி ‘மக்கர்’ – பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி

சின்னாளபட்டி: சின்னாளபட்டி பகுதி நியாய விலை கடைகளில் இணைய தள சேவை பாதிப்பால், ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் கார்டுதாரர்கள் அவதியடைகின்றனர். சின்னாளபட்டியில் பூஞ்சோலை, பொம்மையசுவாமி கோயில் தெரு, மேட்டுப்பட்டி, நடுத்தெரு பகுதியில் ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இப்பகுதியில் இணையதள சேவை அடிக்கடி தடைபடுவதால் பொருட்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் முதியவர்களின் விரல் ரேகையை பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் தினசரி 200 நபர் முதல் 300 நபர்கள் வரை பொருட்களை வழங்கக்கூடிய கடைகளில், சுமார் 100 முதல் 150 பேருக்கு தான் ரேஷன் பொருட்களை விநியோகிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் நியாய விலைக்கடைகளில் பொருட்களை பெற வரும் முதியோர்கள் மற்றும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கார்டுதாரர்கள் நலன் கருதி, அதிவேக இணைய தள வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென்று ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ரேஷன் கடை ஸ்கேனர் கருவி அடிக்கடி ‘மக்கர்’ – பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chinnanapatti ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...