×

ஆவணி பிறந்ததையொட்டி முதல் முகூர்த்த நாளில் விசேஷங்கள் ‘ஜோரு’ – கூட்டநெரிசலால் தேனியில் ‘பேஜாரு’

தேனி: ஆடி மாதத்தில் திருமணம், கடை திறப்பு போன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் நடப்பதில்லை. ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான நேற்றை நாளில், கடந்த மாதத்தில் திருமணம் நடத்த முடியாதவர்கள், கடைகளை திறக்க முடியாதவர்கள், புதிய தொழில் துவங்க முடியாதவர்கள் என பெரும்பாலானோர் விசேஷங்கள் நடத்தினர். இதன்காரணமாக தேனி நகரம் மட்டுமல்லாது தேனி மாவட்டத்தில் பரவலாக அனைத்து ஊர்களிலும் திருமணம், புதிய வர்த்தக நிறுவன திறப்பு விழாக்கள் நடந்தன. இதில் கலந்து கொள்ள வெளியூர்களில் இருந்து வந்த பயணிகள் தேனி புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் திரண்டனர். இதேபோல தேனி நகரின் முக்கிய சாலைகளான மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு, கம்பம் ரோட்டிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த நாளில் விசேஷங்கள் நடப்பது நல்லது தான். கொரோனா பரவல் கணிசமாக குறைந்தாலும், ஊரடங்கு முழுமையாக நீக்கப்படாத நிலையில் திருமண மண்டபங்கள், பஸ்களில் சமூக இடைவெளியை மறந்த மக்களால் கொரோனா மீண்டும் பரவக் கூடும். எனவே, மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மறக்காமல் பின்பற்ற வேண்டும், என்றனர்….

The post ஆவணி பிறந்ததையொட்டி முதல் முகூர்த்த நாளில் விசேஷங்கள் ‘ஜோரு’ – கூட்டநெரிசலால் தேனியில் ‘பேஜாரு’ appeared first on Dinakaran.

Tags : Avani ,Joru ,Bejaru ,Theni ,Adi ,Mukurtha ,Dinakaran ,
× RELATED தேனியில் நுங்கு விற்பனை ஜோரு