×

மே.வங்கத்தில் தேர்தலுக்கு பின் வன்முறை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, 3வது முறையாக ஆட்சி அமைத்தது. இத்தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும், தேர்தலில் பாஜ.வுக்காக பணியாற்றிய பாஜ. நிர்வாகிகள், அவர்களின் குடும்பத்தினர் மீது திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் நடத்தினர். இதில், ஏராளாமானோர் கொல்லப்பட்டதாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், இந்த சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்தும்படி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை கேட்டு கொண்டது. அதன் அடிப்படையில், இடைக்கால தலைமை நீதிபதி ராஜேஷ் பிந்தால் தலைமையில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இதில் 5 நீதிபதிகளும் நேற்று ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். தீர்ப்பில் அவர்கள், ‘தேர்தலுக்குப் பிறகான வன்முறையில் நடந்த கொலைகள், பாலியல் பலாத்காரம், பலாத்கார முயற்சி சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மற்ற குற்றச்சாட்டுகள் குறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் சுமன் பாலா சாகு, சோமன் மித்ரா, ரன்வீர் குமார் ஆகியோர் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்குகள் பற்றி இதுவரை நடத்திய விசாரணையின ஆவணங்கள் அனைத்தையும், சிபிஐ.யிடமும், சிறப்பு புலனாய்வு குழுவிடமும் மேற்கு வங்க போலீசார் ஒப்படைக்க வேண்டும். சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் நடைபெறும். இது தொடர்பாக உத்தரவு தனியாக பிறப்பிக்கப்படும்,’ என கூறப்பட்டுள்ளது….

The post மே.வங்கத்தில் தேர்தலுக்கு பின் வன்முறை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு: கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Mae ,CBI ,Bengal ,High Court Action ,Kolkata ,West Bengal ,Mamta Panerje ,Trinamool Congress ,Amoka ,Kolkata High Court Action ,Dinakaran ,
× RELATED திரிணாமுல் தலைவர்கள் வீட்டில் ரெய்டு