×

அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் ஓடையை கடந்து செல்வதில் சிரமம் 100 வேலையை மக்கள் புறக்கணிப்பு

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அண்ணங்காரன்பேட்டை கிராமத்தில் 100 நாள் வேலையை 50 க்கும் மேற்பட்டோர் புறக்கணித்து காத்திருந்தனர்.தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் உள்ள 3 மற்றும் 4 வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் 100 நாள் வேலைக்காக சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் வேலைக்கு ஒருவார காலம் சென்று வந்தனர். இதற்கு செல்வதற்கு இரண்டு வடிகால் ஓடையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் தொடர் மழை பொழிந்து வருவதால் அந்த ஓடைகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. ஓடைகளில் தண்ணீர் அதிகம் செல்வதால், ஓடையை கடந்து செல்வது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது. மேலும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் 100 நாள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.இதுகுறித்து ஊராட்சி நிர்வாக சார்பில் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அரியலூர் மாவட்ட கூட்டரங்கில் கூட்டம் நடைபெற்றதால் யாரும் நேரில் வந்து விசாரணை செய்யவில்லை. எனவே அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தங்களுக்கு வேறு பகுதியில் வேலை வழங்க வேண்டும் எனவும், இன்றைய சம்பளம் பிடித்தம் இன்றி வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து பணியை புறக்கணித்தனர்….

The post அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் ஓடையை கடந்து செல்வதில் சிரமம் 100 வேலையை மக்கள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Annakaranpet village ,Tha.Pazhur ,Annangaranpet ,Ariyalur district ,Dinakaran ,
× RELATED உணவை தேடி கிராமப்புற பகுதிக்கு வரும்...