×

பெரணமல்லூர் ஒன்றியத்தில் பண்ணை குட்டை அமைக்கும் பணிகளை அதிகாரி ஆய்வு

பெரணமல்லூர்:  பெரணமல்லூர் ஒன்றியத்தில் பண்ணைக் குட்டை அமைக்கும் பணிகளை மாவட்ட உதவி திட்ட இயக்குனர் இமயவரம்பன் ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு மாதத்திற்குள் 1,118 பண்ணைக் குட்டைகளை அமைத்து, கின்னஸ் சாதனை செய்வதற்கான பணிகள் கடந்த வாரம் முதல் விரைவாக நடைபெற்று வருகிறது.அதன்படி, பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சிகளில் பண்ணைக் குட்டை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளாநல்லூர், ஆயிலவாடி, தாடிநொளம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பண்ணைக் குட்டை அமைக்கும் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட உதவி திட்ட அலுவலர் இமயவரம்பன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறுகையில், `பண்ணைக் குட்டை அமைக்கும் பணிகளை அடுத்த மாதம் 8ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். குறிப்பாக, நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கின்னஸ் உலக சாதனை புரியவும் கலெக்டர் அறிவுறுத்தலின்படி ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து திறம்பட இந்த பணிகளை முடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். ஆய்வின்போது, பிடிஓக்கள் பரணிதரன், தர், ஊராட்சி மன்ற தலைவர்கள், பணித்தள மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்….

The post பெரணமல்லூர் ஒன்றியத்தில் பண்ணை குட்டை அமைக்கும் பணிகளை அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Peranamallur ,Union ,Project ,Imayavaramban ,Peranamallur union ,Thiruvannamalai ,Dinakaran ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...