×

அதிமுக நிர்வாகிகள் நியமனம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளராக கே.முருகுமணி (புவனகிரி, கடலூர் மேற்கு மாவட்டம்), ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளராக எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன் (நெய்வேலி, கடலூர் மத்திய மாவட்டம்) நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஜெயலலிதா பேரவையின், பேரவை துணைச் செயலாளராக டி.மாறன் (மயிலாப்பூர், தென் சென்னை) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளராக வி.எஸ்.நாராயணராவ் (தென் சென்னை தெற்கு, கிழக்கு) நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post அதிமுக நிர்வாகிகள் நியமனம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : OPS ,EPS ,Chennai ,Urimukh ,Dinakaran ,
× RELATED விஷச் சாராய மரணம் தொடர்பாக ஆளுநருடன்...