×

அந்தரங்க புகைப்படத்தை காட்டி பெண்ணின் கணவரை மிரட்டிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

திருவொற்றியூர்: சென்னை மண்ணடியை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் தனது மனைவி ரூபாவதியுடன் இணைந்து முத்தியால்பேட்டையில் கூரியர் கம்பெனி நடத்தி வருகிறார். அப்போது கூரியர் கம்பெனிக்கு முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின் வந்து சென்றுள்ளார். அப்போது ரூபாவதி அவரிடம் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது பெஞ்சமின் அதை வீடியோ எடுத்துள்ளார். ரூபாவதி காவலர் பெஞ்சமின் பிராங்கிளின் உடன் இருந்த உறவை முறித்துக்கொண்டு அவரை சந்திப்பதை தவிர்த்தார்.இதனால் ஆத்திரமடைந்த பெஞ்சமின் அவருக்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் அவரிடம் இருந்து நிறைய பணம் மற்றும் தங்க நகைகளை மிரட்டி  வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரூபாவதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த விஷயம் ஜெயபிரகாஷ்க்கு தெரியவரவே அவர் பெஞ்சமின் பிராங்கிளின் மற்றும் ரூபாவதியை கண்டித்துள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து ஜெயபிரகாஷை மிரட்டி ரூ.10 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின் எண்ணூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், விசாரணையின் அடிப்படையில் பெஞ்சமின் பிராங்க்ளினை பணியிடை நீக்கம் செய்து மாதவரம் துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்….

The post அந்தரங்க புகைப்படத்தை காட்டி பெண்ணின் கணவரை மிரட்டிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Jaiaprakash ,Maddy, Chennai ,Muthialpate ,Rupee ,
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு அரசு கல்லூரி...