×

பணமோசடி வழக்கு அமலாக்கத் துறை முன் மெகபூபா தாயார் ஆஜர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூமா முக்தியின் உதவியாளர் வீட்டில் அமலாக்க துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது இரண்டு டைரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மெகபூபா முப்தி முதல்வராக இருந்தபோது சட்ட விரோதமாக பணபரிமாற்றம்  செய்யப்பட்டது தொடர்பான விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக, அமலாக்கத்துறையினர் பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  சில லட்சம் ரூபாய் தொகையானது மெகபூபாவின் தாயார் குல்ஷான் நசீரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பறிமுதல் செய்யப்பட்ட டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முன்னாள் முதல்வர் மெகபூபாவின் தாயார் விசாரணைக்காக ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனை தொடர்ந்து மெகபூபாவின் தாயார் குல்ஷான் நேற்று ஸ்ரீநகரின் சிவில்லைன் பகுதியில் அமைந்துள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது தனது மகள் மெகபூபாவையும் அவர் உடன் அழைத்து வந்து இருந்தார்….

The post பணமோசடி வழக்கு அமலாக்கத் துறை முன் மெகபூபா தாயார் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Megabooba ,Enforcement Directorate ,Srinagar ,chief minister ,Jammu and Kashmir ,Meghapooma Mukti ,
× RELATED டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு...