×

நகரும் விண்கற்களை கண்டுபிடித்த அரியலூர் அரசுப்பள்ளி ஆசிரியைகள் இரண்டு பேருக்கு பாராட்டு

அரியலூர்: நகரும் விண்கற்களை கண்டுபிடித்த அரியலூர் அரசுப்பள்ளி ஆசிரியைகள் இரண்டு பேருக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசாவுடன் இணைந்து செயல்படும் நிறுவனம் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு விண்கற்களின் வகைகளை கண்டுபிடிப்பதற்கான பயிற்சி அளித்து வருகிறது. இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் நகரும் விண்கற்களை கண்டுபிடிக்கும் பயிற்சியில் கலந்து கொண்டனர்.அதன்படி பயிற்சியில் ஈடுபட்டிருந்த இருவர் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்து 40 விதமான நகரும் பொருட்களை கண்டுபிடித்து அறிக்கை அளித்தனர். ஆய்வறிக்கையின் அடிப்படையில் 18 விண்கற்கள் முதற்கட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதற்காக இரு ஆசிரியைகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன….

The post நகரும் விண்கற்களை கண்டுபிடித்த அரியலூர் அரசுப்பள்ளி ஆசிரியைகள் இரண்டு பேருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Ariyalur government ,Ariyalur ,America's Space Research Center ,NASA ,
× RELATED அரியலூர் அரசு ஐடிஐயில் மாணவர்கள்...