×

ஆப்கனின் ரூ.28,000 கோடி இருப்பை முடக்கியது ஐ.எம்.எப்.!: தாலிபான் கைகளுக்கு நிதி செல்லாமல் இருக்க நடவடிக்கை..!!

டெல்லி: ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றியிருப்பதை அடுத்து ஆப்கன் அரசு இருப்பு வைத்துள்ள சுமார் 28,000 கோடி ரூபாயை ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நாணய நிதியம் முடக்கியிருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தில் ஆப்கன் அரசு கடந்த ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பு வரை 440 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பீட்டில் சுமார் 28,000 கோடி ரூபாய் இருப்பு வைத்திருந்தது. ஆப்கன் தற்போது தாலிபான்கள் வசமாகியிருக்கும் நிலையில் இந்த நிதியை தாலிபான்கள் கைப்பற்றக்கூடும் என்ற செய்திகள் வெளியாகின. இதையடுத்து தாலிபான்கள் ஐ.எம்.எப். நிதிக்கு உரிமை கோருவதை தடுக்குமாறு அமெரிக்க கருவூலம் சர்வதேச நாணய நிதியத்தை கேட்டுக்கொண்டது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தில் உள்ள 28,000 கோடி ரூபாயை தாலிபான்கள் கையாள முடியாதபடி முடக்கி இருப்பதாக ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தாலிபான் வசமாகிய நாளில் இருந்து அமெரிக்கர்கள் உள்பட ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினர் ஆப்கனை விட்டு வெளியேற போராடி வருகின்றனர். இதனிடையே நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியாக காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் ஆப்கன் குடிமக்களை தாலிபான் படையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று விமான நிலையத்திற்குள் செல்ல முயன்ற மக்கள் மீது தாலிபான்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்….

The post ஆப்கனின் ரூ.28,000 கோடி இருப்பை முடக்கியது ஐ.எம்.எப்.!: தாலிபான் கைகளுக்கு நிதி செல்லாமல் இருக்க நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : IMF ,Afghanistan ,Delhi ,Taliban ,Afghan government ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் நேற்று பெய்த திடீர்...