×

குமரியில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை அனுப்புங்கள்!: கேரள அமைச்சர் எழுதிய கடிதத்திற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்..!!

குமரி: கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை அனுப்பக்கோரி கேரள அமைச்சர் எழுதிய கடிதத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். கேரளாவின் விழிஞ்சலில் கட்டப்பட்டு வரும் அதானி குழுமத்தின் துறைமுக பணிகளுக்காக அம்மாநிலத்தின் 19 குவாரிகளில் கற்கள் எடுக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் 3 குவாரிகளில் மட்டும் கற்களை எடுக்க கேரள அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கற்கள் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து கற்கள் எடுத்து செல்வதில் போக்குவரத்து சிக்கல் இருப்பதாகவும் இதனை தீர்க்க வேண்டும் என்றும் கேரள துறைமுக அமைச்சர் அகமது தேவர்கோவில் அண்மையில் தமிழ்நாடு அரசிற்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு அனுமதிக்கவே கூடாது என சமூக ஆர்வலர்கள் மத்தியில் புகார் எழுந்தது. கேரளாவின் கனிம வளங்களை பாதுகாத்து வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் வளங்களை அழிக்க முயற்சிகள் நடப்பதாக பச்சைத்தமிழர் கட்சியின் நிறுவனர் சுப்பு உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் கனிம வளங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கைவிடுத்திருக்கிறார். கன்னியாகுமரியில் அனுமதிபெறாத கல்குவாரிகளில் கற்கள் எடுக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கற்கள் மற்றும் எம்.சாண்ட் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக சுப்பு உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தமிழ்நாட்டின் கனிம வளங்கள் பறிபோவதுடன் குமரியில் சாலைகள் சேதமடைந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அவர் வேதனை தெரிவித்திருக்கிறார். …

The post குமரியில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை அனுப்புங்கள்!: கேரள அமைச்சர் எழுதிய கடிதத்திற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Kumar ,Kerala ,Kerala Minister ,Kumari ,Kannyakumari ,Kumary ,Dinakaran ,
× RELATED கேரளாவில் எதிர்க்கட்சியினர்...