×

மு.க.ஸ்டாலின் அறிவித்த 7 உறுதிமொழிகளும் தமிழக வளர்ச்சிக்கு உத்வேகம்: திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு: நச்சுனு 4 கேள்வி

* திருச்சி மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்துமா? திருச்சி மாநாடு என்பது தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களை நம்பி அளித்த வேலை. அந்த வேலை நிறைவாக செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் மீது திமுக தோழர்கள் மற்றும் மக்கள் வைத்திருந்த பற்றை நேரடியாக காண  முடிந்தது. மிகப்பெரிய அளவில் வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. திமுக வெற்றிக்கு ஒரு உந்துதலாக நிச்சயம் இந்த மாநாடு இருக்கும் என நம்புகிறேன். அதற்கான வாய்ப்பை தலைமை கழகம் எனக்கு கொடுத்ததற்கு நான் பெருமை  அடைகிறேன். எந்த இடத்திலும் ஒரு சிறிய அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற வகையிலே பிளக்ஸ் போர்டு கூட வைக்கவில்லை. * மாநாட்டை ஏற்பாடு செய்த உங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியது எப்படி இருந்தது? தலைவரின் பாராட்டு விசுவாசமாகவும், நாணயமாகவும் இன்னும் ஆர்வமாக கட்சிக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தையும்  தூண்டியுள்ளது. * மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 7 உறுதிமொழிகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இந்த உறுதிமொழிகள் அனைத்தும் மக்களுக்கு தேவையானவை. 10 ஆண்டு காலத்தில் அதிமுக அரசு செய்யத்தவறியவற்றை முன்னிறுத்தி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயம், கல்வி, ஊரகப்பகுதி, பெண்கள் சிரமத்தை தவிர்க்க,  வேலைவாய்ப்பை உருவாக்கும் அறிவிப்பு உள்ளிட்ட 7 அறிவிப்புகளும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உத்வேகமாக இருக்கும். இந்த அறிவிப்புகளை மக்களே கைதட்டி வரவேற்றார்கள். இதை மட்டும் செய்து முடித்தால் இன்னும் 20 ஆண்டுகள்  திமுக ஆட்சி தொடர்ந்து தமிழகத்தில் வரும் என்பது தான் எங்களின் எண்ணம். * திமுக ஆட்சிக்கு வர திருச்சி மாநாடு எந்த வகையில் வாய்ப்பாக அமைந்திருக்கிறது? தலைவர் கொள்கைகளை எடுத்து வைத்துள்ளார். மக்களை நேரடியாக சென்று சந்தித்துள்ளார். அனைவரிடத்திலும் பெரிய ஆரவாரம் இருந்தது. இதனால்,  திமுகவினர் முழு ஈடுபாடோடு தேர்தலில் பணியாற்றுவார்கள். நிச்சயம் திமுக வெற்றி பெறும். தலைவர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் முதல்வராக வருவார்….

The post மு.க.ஸ்டாலின் அறிவித்த 7 உறுதிமொழிகளும் தமிழக வளர்ச்சிக்கு உத்வேகம்: திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு: நச்சுனு 4 கேள்வி appeared first on Dinakaran.

Tags : b.k. G.K. ,Stalin ,Tamil Nadu ,Dizhagam ,Chief Secretary ,K. N.N. Nehru ,Trichy Conference ,President ,MCM. G.K. ,B.M. G.K. 7 ,
× RELATED பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.410.73...