×

அஞ்சுகிராமம்-வழுக்கம்பாறை சாலையில் ஆக்ரமிப்பை அகற்றி விரிவுபடுத்தப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

அஞ்சுகிராமம்: அஞ்சுகிராமம் – வழுக்கம்பாறை சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகின்றன. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு தேவையான உபகரணங்கள் இந்த சாலை வழியாகவே அதிக அளவில் கொண்டு செல்லப்படுகின்றன. இது தவிர முக்கிய ஆன்மீக தலங்களான உவரி, ஆத்தங்கரை பள்ளிவாசல், திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், ராமேஸ்வரம் ஆகியவற்றுக்கும் இந்த சாலையே பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி விமான நிலையத்திற்கு செல்பவர்களும் இந்த வழித்தடத்தையே பயன்படுத்துகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையானது நாளுக்கு நாள் பெருகி வரும் வாகன பெருக்கத்துக்கு ஏற்ற வகையில் இல்லாமல் போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது. சாலையின் அகலம் குறைவு, ஆங்காங்கே காணப்படும் ஆக்ரமிப்புகளே காரணம் என்று சொல்லப்படுகிறது. சமீப காலமாக விபத்துக்களும் அதிக அளவில் நடக்கின்றன. சாலை ஓரங்களில் உள்ள வடிகால்கள் செடி, கொடி, முட் புதர்களாலும், மணல் திட்டுக்களாலும் மூடிக்கிடக்கின்றன. ஒரு சில சேதமடைந்தும், ஆக்ரமிக்கப்பட்டும், பல இடங்களில் வடிகால்களே இல்லாமலும் உள்ளன. மழைக்காலங்களில் வெள்ளம் செல்ல இடமின்றி சாலையில் தேங்குகிறது. கனரக வாகனங்கள் அதிகமாக இந்த வழியாக செல்கிறது. ஆகவே சாலையில் ஆங்காங்கே   குண்டும், குழியுமாகவே காணப்படுகிறது. மயிலாடியை அடுத்த புன்னார்குளம் அருகில் அமைந்துள்ள கூண்டு பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. கூண்டு பாலத்தை அகலப்படுத்த பல வருடமாக கோரிக்கை வைத்தும், அதகாரிகள் கண்டு கொள்ளவில்லை. புன்னார்குளம் சந்திப்பில் சாலை மிக குறுகிய வளைவாக செல்வதால் ஒரு புறத்தில் இருந்து வரும் வாகனம் மறுபுறத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு தெரிவதில்லை. இதனால் விபத்துகளும் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை வாகன ஓட்டிகள், பொது மக்களின் நலன் கருதி விரிவுபடுத்தி, சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் கவனிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். …

The post அஞ்சுகிராமம்-வழுக்கம்பாறை சாலையில் ஆக்ரமிப்பை அகற்றி விரிவுபடுத்தப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Anjugiramam-Balukampara Road ,Anjughiramam ,Anjukirambaram ,Kukkampara road ,Kedangulam Nuclear Power Station ,Post-Balukrampara Road ,
× RELATED அஞ்சுகிராமத்தில் வாகன சோதனை டிராபிக்...