×

‘உங்க சங்காத்தமே வேண்டாம்…பேசாம சென்னைக்கு போறேன்…’எச்.ராஜா முடிவால் பாஜவினர் குஷி

எச்.ராஜாவுக்கு, அவரது சிவகங்கை மாவட்ட பாஜ கட்சிக்குள்ளே எதிர்கோஷ்டி ஏகப்பட்டது இருக்கிறதாம். மாவட்ட செல்வாக்கை தக்க வைக்க, மேலிடத்தில் பேசி, மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் முக்கிய பொறுப்புகளை தனது  ஆதரவாளர்களுக்கே வாங்கிக் கொடுத்துள்ளாராம். இதனால் எதிர்கோஷ்டியினர் காண்டு ஆகி உள்ளனர். கடந்த முறை மத்திய அமைச்சர் கனவோடு சிவகங்கை எம்பி தேர்தலில் போட்டியிட்டு பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பரிதாபமாக  ேதாற்றார். கடைசியாக 2001ம் ஆண்டு திமுக கூட்டணியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அதன்பின்னர், சிவகங்கை மாவட்ட அரசியலில் இவரது கொடி உயரே பறக்கவில்லை. இனி சிவகங்கை நமக்கு சரிப்பட்டு வராது என  முடிவெடுத்துள்ள இவர், வரும் சட்டமன்ற தேர்தலில் சென்னை பக்கம் ஏதாவது ஒரு தொகுதி கேட்டு போய் விடலாம் என கிளம்பி விட்டார். இதையறிந்த எதிர்கோஷ்டியும் உற்சாகத்தில் திளைக்கின்றனராம்….

The post ‘உங்க சங்காத்தமே வேண்டாம்…பேசாம சென்னைக்கு போறேன்…’எச்.ராஜா முடிவால் பாஜவினர் குஷி appeared first on Dinakaran.

Tags : Chennai ,H. Raja ,Bajans ,Sivaganga district ,BJP ,
× RELATED பெண்களுக்கு எதிரான சர்ச்சை கருத்து...