×

விமானப்படை விமானம் மூலம் ஆப்கனில் இருந்து இந்தியர்கள் மீட்பு: பிரதமர் மோடி தலைமையில் அவசர உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவித்த இந்திய தூதர், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 120 பேர் இந்திய விமானப்படை மூலம் மீட்கப்பட்டு நாடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமை யில் அவசர உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இருபதுஆண்டு களு க்குப் பிறகு ஆப்கானிஸ் தானை தலிபான் தீவிரவாதிகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதைத் தொடர்ந்து, அங்கிருந்து மக்கள் கூட்டம் கூட்ட மாக  வெளியேறி வருகின்ற னர். காபூல் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் விமான நிலையம் மூடப்பட்டது. அங்கிருந்து ஏற்கனவே 129 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 200 இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாகவும், அவர்கள் காபூல் தூதரகத்தில் தங்கியிருப்பதாகவும் நேற்று முன்தினம் கூறப்பட்டது. இந்நிலையில், காபூல் விமான நிலையம் நேற்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் இந்திய மக்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, இந்திய விமானப்படையின் சி -17 விமானம் மூலம் இந்திய தூதர் ருத்ரேந்திர தாண்டன், தூதரக அதிகாரிகள், பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இந்திய மக்கள் சிலர் உட்பட 120 பேர் காபூலில் இருந்து மீட்கப்பட்டு குஜராத்தின் ஜாம்நகரில் ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பத்திரமாக திரும்பிய இந்திய தூதர் ருத்ரேந்திர தாண்டன் கூறுகையில், ‘‘பாதுகாப்பாக  எங்களை வெளியேற்றிய இந்திய விமானப்படைக்கு நன்றி. நாம் ஆப்கானிஸ்தானின் மக்களைக் கைவிடமாட்டோம். நாங்கள் அவர்களுடனான தொடர்புகளைத் தொடர முயற்சிப்போம்’’ என்றார். இதே போல மற்றொரு சிறப்பு விமானம் மூலம் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 99 பேர் காபூலில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.இதற்கிடையே, ஆப்கானில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்களுக்கு அவசர இ-விசா வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதால், அங்கு இந்திய தூதரக அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால், நாட்டிற்கு வர விரும்பும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு அவசர மின்-விசா வழங்கப்படும். அனைத்து ஆப்கானியர்களும், தங்கள் மதத்தைப் பொருட்படுத்தாமல், ‘இ-எமர்ஜென்சி எக்ஸ்-இதர விசா’ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் டெல்லியில் பரிசீலனை செய்யப்பட்டு வழங்கப்பட்டும்’ என்றார். இதுவரை ஆப்கானிஸ் தானில் இருந்த தூதரக அதிகாரிகள், பணியா ளர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  எஞ்சிய இந்தியர்கள் அனைவரை யும் மீட்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சிறப்பு விமானம் தஜி கிஸ்தான் விமான நிலைய த்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு ள்ளது. காபூலில் பயணிகள் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டதும், காபூலில் இருந்து எஞ்சிய இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என அதிகாரிகள் கூறி உள்ளனர். தலிபான்கள் ஆப் கானில் ஆட்சியை பிடித்துள்ளதால் அவர்கள் மூலமாக காஷ் மீரில் இந்தியாவுக்கு நெருக்கடிகள் ஏற்படும் என அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், ஆப்கன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று அவசர உயர்மட்ட கூட் டம் நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.* அதிபர் பொறுப்பில் துணை அதிபர் சலேபுதிய அரசு அமைப்பது தொடர்பாக தலிபான்கள், ஆப்கன் அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியான நிலையில், துணை அதிபர் அம்ருல்லா சலே நேற்று தனது டிவிட்டரில் அதிரடி பதிவொன்றை வெளியிட்டார். அதில், ‘ஆப்கன் அரசியலமைப்பு சட்டப்படி, அதிபர் தலைமறைவானாலோ, தப்பி ஓடினாலோ, மரணமடைந்தாலோ, அதிபர் பொறுப்பு துணை அதிபருக்கு வந்துவிடும். அதன்படி, இனி நானே பொறுப்பு அதிபர். எனக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்’’ என்றார். * பெண்கள் உரிமைக்கு மதிப்பளிப்போம்தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக நேற்று அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் அளித்த பேட்டியில், ‘‘ஷரியத் சட்டத்திற்கு உட்பட்டு, பெண்களின் உரிமைக்கு நாங்கள் மதிப்பளிப்போம். பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்படும். அதே சமயம் பத்திரிகையாளர்கள் தேச மதிப்புக்கு எதிராக செயல்படக் கூடாது. நாட்டின் வளங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். மற்ற நாடுகளை இலக்காகக் கொண்டு, யாருக்கும் நாங்கள் அடைக்கலம் தரமாட்டோம். அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும்’’ என்றார். கடந்த முறை தலிபான் ஆட்சியில் பெண்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகினர். இம்முறை அந்த தவறு நடக்காது,’’ என தலிபான்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.* பேஸ்புக் தடை பேஸ்புக் செய்தி தொடர்பாளர் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், ‘அமெரிக்க சட்டத்தின் கீழ் தலிபான் பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, எனவே எங்கள் நிறுவன கொள்கைபடி, தலிபான்கள் அல்லது சார்பாக பராமரிக்கப்படும் கணக்குகளை நாங்கள் அகற்றி, அவர்களைப் புகழ்வது, ஆதரிப்பது மற்றும் பிரதிநிதித்துவம் செய்வதைத் தடைசெய்கிறோம்’ என்றார்….

The post விமானப்படை விமானம் மூலம் ஆப்கனில் இருந்து இந்தியர்கள் மீட்பு: பிரதமர் மோடி தலைமையில் அவசர உயர்மட்ட ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Indians ,PM Modi ,New Delhi ,Afghanistan ,Indian Air Force ,
× RELATED மோடியின் கையை விட்டு தேர்தல் நழுவிவிட்டது: ராகுல் விமர்சனம்