×

சாஹிப்சாதே கட்டிடம் திறப்பு

சென்னை: குருநானக் எஜூகேஷனல் சொசைட்டி சார்பில் கருத்தரங்க கூடம், மருத்துவ சேவை மையம், திறன் பயிற்சி மையம், மத்திய அரசு பணியாளர் தேர்வு பயிற்சி மையம், பாண்டிச்சேரி பல்கலைக்கழக திட்ட மையம், விருந்தினர் இல்லம், கல்விப்பணி சார்ந்த அலுவலகம் உள்ளிட்ட வசதிகளுடன், 3 தளங்களை கொண்ட சாஹிப்சாதே கட்டிட திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பங்கேற்று கட்டிடம் மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தார்.சென்னை மீனாட்சியம்மாள் பல் மருத்துவமனை பேராசிரியர் மற்றும் இயக்குநர் டாக்டர்.ஜெய் தீப் மகேந்திரா, குருநானக் மருத்துவ சேவை மையத்தினை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், குருநானக் எஜூகேஷனல் சொசைட்டியின் திட்டக்குழு தலைவர் ஜஸ்பீர் சிங் நருலா, செயலர் மற்றும் தாளாளர் மஞ்சித் சிங் நய்யார், தலைவர் ரஜீந்தீர் சிங் பாசின், ஆலோசகர் மெர்லின் மொரைஸ், குருநானக் கல்லூரி முதல்வர் மா.கு.ரகுநாதன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், குருநானக் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்….

The post சாஹிப்சாதே கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Sahibzadeh Building ,Chennai ,Guru Nanak Educational Society ,Sahibzade building ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?