×

குக்கர் நிர்வாகிகளிடம் டீலிங் பேச இலை கட்சியில ஸ்பெஷல் டீம்

சொத்து குவிப்பு வழக்குல சிக்கிய சசிகலா 4 ஆண்டுகள், ஜெயில் தண்டனை முடிஞ்சி, கடந்த ஜனவரி மாதம் வெளிய வந்தாங்க. அப்போ, பெங்களூருல இருந்து சென்னைக்கு வர்ற வழியெல்லாம் குக்குர் கட்சிக்காரங்க, உற்சாக வரவேற்பு  கொடுத்தாங்க. இதனை தடுக்க இலை கட்சியில பல முட்டுக்கட்டைகளை போட்டாங்க, ஆனாலும், இலை கட்சியில இருந்தே, பலபேரோட, ஆதரவு இருந்துச்சு. இதனால இலை கட்சி தலைமை கொஞ்சம் சைலன்ட் ஆச்சு. சசிகலா வெளியே  வந்ததால, இலை கட்சியில இருக்குற முக்கிய நிர்வாகிங்க அடக்கி வாசிச்சாங்க. ஆனாலும், இலை கட்சியில இருந்து, குக்கர் பக்கம் யாரும் போகவே இல்லை. இதற்கிடையில, சசிகலா திடீர்னு அரசியல்ல இருந்து ஒதுங்கிக்கொள்வதாக  அறிவிச்சாங்க. இதனால குக்கர் கட்சிக்காரங்க ரொம்ப அப்செட் ஆனாங்க. இந்த நிலைமையில, இலை கட்சியில ஸ்பெஷல் டீம் போட்டிருக்காங்களாம். அந்த டீமோட வேலை, குக்கர் கட்சியில இருக்கிற முக்கிய நிர்வாகிங்களை சந்திச்சு, இலை கட்சிக்கு  அழைச்சி வரணுமாம். இந்த வேலை தான், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலைன்னு பல மாவட்டங்கள்ல ஜோரா போயிட்டிருக்காம். குக்கர் நிர்வாகிங்களும், இங்க இருந்தா நம்ம பப்பு வேகாது. இலை கட்சியில போய்  சேரலாம்னு கெளம்ப ரெடியாகிட்டாங்களாம்….

The post குக்கர் நிர்வாகிகளிடம் டீலிங் பேச இலை கட்சியில ஸ்பெஷல் டீம் appeared first on Dinakaran.

Tags : Leaf ,Cooker ,Sasikala ,
× RELATED இரட்டை இலை சின்னம் வழக்கில் சிக்கிய...