×

அரக்கோணம் – ரேணிகுண்டா மார்க்கம் ரயில் வேகத்தை அதிகரிக்க திட்டம்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிடப்பட்ட அறிக்கை: அரக்கோணம் – ரேணிகுண்டா வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள 19 லெவல் கிராஸிங்கை நீக்கி அதற்கு பதிலாக சுரங்கப் பாதைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக சுமார் 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் கீழ் தற்காலிகமாக பொருத்தப்பட்டிருந்த இரும்பு தூண்கள் அகற்றப்பட்டு, கான்கிரீட் பெட்டிகள் பொருத்தப்பட்டன.  ராட்சத கிரேன்கள் உதவியுடன் 60 நிமிடங்களுக்குள்ளாகவே அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டது. இதுபோன்ற சுரங்கப்பாதைகளை  அமைப்பதன்மூலம் ரயில்களை சரியான நேரத்தில் இயக்கவதோடு மட்டுமல்லாமல், தடையில்லா சாலை போக்குவரத்திற்கும் வழிவகை செய்கிறது….

The post அரக்கோணம் – ரேணிகுண்டா மார்க்கம் ரயில் வேகத்தை அதிகரிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Arakonam ,Ranikunda ,Chennai ,Southern Railway ,Rainigunda ,Hemakkonam ,Dinakaran ,
× RELATED வளமான இந்தியாவிற்கு...