×

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு அனைத்து நாடுகளும் அடைக்கலம் தர வேண்டும் : உலக தலைவர்களுக்கு மலாலா வேண்டுகோள்

இஸ்லாமாபாத் : ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்று இருக்கும் நிலையில், ஆப்கன் மக்களை காக்க அமெரிக்க அதிபர் ஜோபிடன் துணிச்சலுடன் முன்வர வேண்டும் என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் கோரிக்கை வைத்துள்ளார். தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு கீழ் ஆப்கன் மக்கள் கொண்டு வரப்பட்டு இருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 24 வயது மலாலா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்திருக்கும் பேட்டியில், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோபிடன் நிறைய விஷயங்களை செய்ய வேண்டி இருப்பதாகவும் துணிச்சலுடன் செயலாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு அனைத்து நாடுகளும் அடைக்கலம் தர வேண்டும் என்று உலக தலைவர்களுக்கு மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.நெருக்கடியான காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள், குழந்தைகள் குறித்து மிகுந்த கவலை கொள்வதாக தெரிவித்து இருக்கும் மலாலா, ஆப்கனில் இருந்து வெளியேறும் மக்களை பாகிஸ்தானில் அனுமதிக்குமாறு அதிபர் இம்ரான்கானுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் கூறியுள்ளார்.மேலும் அந்த கடிதத்தில் குழந்தைகள், பெண்களுக்கு கல்வியும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் தாம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்….

The post ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு அனைத்து நாடுகளும் அடைக்கலம் தர வேண்டும் : உலக தலைவர்களுக்கு மலாலா வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Malala ,Islamabad ,US ,President ,Jobiden ,Taliban ,
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி