×

ஆண்டிபட்டி அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: கழிவுநீர் கலப்பதால் மக்களுக்கு சுகாதாரக்கேடு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள். இந்த கிராமத்துக்கு குன்னூர்-பாலக்கோம்பை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் வரும் தண்ணீரை குப்பாம்பட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் தேக்கி, அங்கிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு விநியோகம் செய்கின்றனர். இந்நிலையில், மேல்நிலைத் தொட்டியில் இருந்து பிச்சம்பட்டி கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டி-பாலக்கோம்பை சாலையில் ஓரமாக செல்லும் இந்த குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால் குடிநீர் வீணாகிறது. மேலும், இந்த குழாயை ஒட்டி கழிவுநீர் வாறுகால் செல்கிறது. இதனால், குழாய் உடைப்பு வழியாக கழிவுநீர் கலக்கிறது. இந்த தண்ணீரை குடிக்கும் பிச்சம்பட்டி கிராம மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 2 நாட்கள் ஆகின்றன. இதே தண்ணீரை தான் குடித்து வருகிறோம்.இது குறித்த ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடைந்த குழாயை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்’ என்றனர்….

The post ஆண்டிபட்டி அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: கழிவுநீர் கலப்பதால் மக்களுக்கு சுகாதாரக்கேடு appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Pichampatti ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டி அருகே சாலை சீரமைப்பு பணியின் தரம் ஆய்வு