×

கீழக்கரையில் மரங்களில் வவ்வால் கூட்டம் அதிகரிப்பு

கீழக்கரை:  கீழக்கரை வடக்கு தெரு பகுதிகளில் உள்ள உயரமான மரங்களில் ஏராளமான வவ்வால்கள் தஞ்சமடைந்துள்ளன. இரவில் இரைதேடி செல்லும் வவ்வால் கூட்டம் காலையில் மீண்டும் மரத்தில் தொங்குகின்றன. நரி போன்ற முகத்துடன் சிகப்பு கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த வவ்வால்கள், அதன் இறக்கைகள் வால் பகுதிகள் வலுவானதாக உள்ளது. இவை பெரும்பாலும் பழம் தின்னிகள் ஆகும். இரவு நேரங்களிலேயே பறந்து திரிந்து வாழும் வவ்வால்கள் 48 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டது.இவை  பழத்தின் சாற்றை மட்டுமே உறிஞ்சி குடித்து, பழத்தின் சக்கையை உமிழ்ந்து விடும். ஆனால் வாழைப்பழம் போன்ற மிருதுவான பழங்களை முழுதாக தின்று விடும். கீழக்கரையில் ஒவ்வொரு மரத்திலும் நூற்றுக்கணக்கில் தொங்கும் இந்த வவ்வால்கள் காண்பதற்கு மரத்தின் காய்ந்த இலைகள் போன்று காட்சியளிக்கிறது….

The post கீழக்கரையில் மரங்களில் வவ்வால் கூட்டம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Vaval ,Vavas ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?