×

கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் ஒற்றை யானை அட்டகாசம்: பொதுமக்கள் பீதி

கொடைக்கானல்: கொடைக்கான‌ல் கீழ்மலை பகுதியான பேத்துப்பாறை கிராமத்தில் ஒற்றை யானை அட்டகாசம் செய்வதால் பொதும‌க்க‌ள் பீதியடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் பேத்துப்பாறை, பாரதி அண்ணா நகர், அஞ்சுவீடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் விவசாய நிலங்களை யானை கூட்டங்கள் அடிக்கடி நாசம் செய்து வருகின்றன. நேற்று பேத்துப்பாறை குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டு யானை புகுந்தது. ஏற்கனவே இதே பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.யானைகளின் அட்டகாசம் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், யானையை விரட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் ஒற்றை யானை அட்டகாசம்: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Kielmalai ,Kodaikanal ,Pethupara village ,Dindigul district ,Dinakaran ,
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை