×

தூத்துக்குடி துறைமுகம் 24 மணி நேரத்தில் 57,090 டன் நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுக கப்பல் சரக்கு தளம் 9, கடந்த 15ம் தேதி எம்.வி.ஸ்டார் லாரா என்ற  கப்பலில் இருந்து 57,090 டன் நிலக்கரியை 24 மணி நேரத்தில் கையாண்டு புதிய சாதனை  படைத்துள்ளது. இச்சாதனையானது, இதற்கு முந்தைய சாதனையான 27.10.2020ல்  கப்பல் சரக்கு தளம் 9ல் எம்.வி.ஓசன் டிரீம் என்ற கப்பலில் இருந்து 24 மணி  நேரத்தில் கையாளப்பட்ட அளவான 56,785 டன் நிலக்கரியை விட இது 305 டன் அதிகமாகும். மேலும்  வ.உ.சிதம்பரனார் துறைமுகம் இந்த வருடத்தில் ஒரே நாளில் 1,89,395 மெட்ரிக்  டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.எம்.வி. ஸ்டார் லாரா  என்ற பனமாக்ஸ் வகை கப்பல் 14.20 மீட்டர் மிதவை ஆழத்துடன் இந்தோனேசியா நாட்டிலுள்ள  முரா புரோவ் துறைமுகத்தில் இருந்து 77,675 டன் நிலக்கரியை வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு எடுத்து வந்துள்ளது. இக்கப்பலில் வந்த 77,675 டன்  நிலக்கரியும் இந்தியா கோக் அன் பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்காக  இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 3 நகரும் பளுதூக்கி இயந்திரங்களால் 24  மணி நேரத்தில் 57,090 டன் நிலக்கரியை கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வ.உ.சி  துறைமுக சேர்மன்  ராமச்சந்திரன்,  இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த  அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள்,  ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரையும் பாராட்டினார் என  துறைமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post தூத்துக்குடி துறைமுகம் 24 மணி நேரத்தில் 57,090 டன் நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை appeared first on Dinakaran.

Tags : Tuticorin Port ,
× RELATED கேரளத்தைச் சேர்ந்த 80 மீனவர்கள்...