- ஒவைசி கட்சி
- அமத்ரகம் கூட்டணி
- TTV
- தினகரன்
- சென்னை
- டிடீவி
- அமதயம் கூட்டணி
- அமதத்தம்
- பொது செயலாளர்
- IMPRC கூட்டணி
- தின மலர்
சென்னை: அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கி டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: 6.4.2021 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அமமுகவும், பாரிஸ்டர் அசதுத்தீன் உவைசி எம்.பி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமமுகவுக்கு அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிம் கட்சிக்கு தமிழ்நாட்டில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….
The post அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு: டிடிவி.தினகரன் அறிவிப்பு appeared first on Dinakaran.