×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை; அதிரடி தகவல் வெளியாக வாய்ப்பு

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்துகின்றனர். போலீஸ் சம்மன் அனுப்பியதால் பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சயான் ஆஜரானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறை சென்றதை தொடர்ந்து 2017ல் கோடநாடு பங்களா காவலாளி கொலை செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவிற்குள் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவிற்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில் , கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார் சயானும் ஒரு கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். கோடநாடு எஸ்டேட் வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தற்போது ஊட்டியில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அதிமுகவின் முக்கிய பிரமுகருக்கு தொடர்பு உள்ளதாக சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் தெரிவித்திருந்தனர். கடந்த 13ம் தேதி இவ்வழக்கு விசாரணை வந்தது. அப்போது,  அரசு வழக்கறிஞர் கோடநாடு கொலை வழக்கை மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டும் என நீதிபதியிடம் மனு அளித்தனர். கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இவ்வழக்கு விசாரணையை முதலில் இருந்து தொடங்கியுள்ளது….

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை; அதிரடி தகவல் வெளியாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kotanadu ,Sayan ,Nilgiris ,Kodanadu ,Dinakaran ,
× RELATED கூடுதல் விலைக்கு மது விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் சஸ்பெண்ட்