×

சோலார் பேனல் மோசடி வழக்கு!: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு..!!

திருவனந்தபுரம்: கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உள்பட காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான சோலார் பேனல் மோசடி வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உம்மன் சாண்டி அரசுக்கு எதிரான சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர் கடந்த 2013ம் ஆண்டு பாலியல் புகார் அளித்திருந்தார். அதில் தொழில் நடக்க மாநில அரசின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் பாலியல் ரீதியில் தங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார். சோலார் பேனல் தொடர்பான வழக்கை மாநில காவல்துறை விசாரித்து வந்த நிலையில் அரசின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் சென்றுள்ளது. இதனை அடுத்து முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, மூத்த காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால், எம்.பி.ஹைபி ஹீடன், அடூர் பிரகாஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. …

The post சோலார் பேனல் மோசடி வழக்கு!: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief Minister ,Umman Sandy ,Thiruvananthapuram ,Congress ,Kerla ,CM ,GP GI ,Dinakaran ,
× RELATED இந்த ஆண்டு வெற்றி நிறைந்த ஆண்டாக...