×

கோடம்பாக்கம்-போரூர் இடையே மெட்ரோ ரயில் பணி நாளை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை:  சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட அறிக்கை: கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலை வழியாக சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டபணி மேற்கொள்ளப்படுவதால், 17ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. * போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் ஆற்காடு சாலையில் செல்லலாம். இந்த வாகனங்களுக்கு எவ்வித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை. ஆற்காடு சாலையில் 80 அடி சாலை சந்திப்பிலிருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்படவுள்ளது.* கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து சாலிகிராமம், போரூர் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக் நகர் 2வது அவென்யூ சாலை, பி.டி.ராஜன் சாலை, ராஜமன்னார் சாலை, 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை செல்லலாம் மற்றும் வன்னியர் சாலை வழியாக விருகம்பாக்கம் செல்லலாம்.* கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பிற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக் நகர் 2வது அவென்யூ சாலை, ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை வழியாக வடபழனி சந்திப்பை அடையலாம். * போரூர் மார்க்கத்திலிருந்து கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் 80 அடி சாலையில் வலதுபுறம் திரும்பி ராஜமன்னார் சாலையில் இடதுபுறம் திரும்பி பி.டி.ராஜன் சாலை- ராஜமன்னார் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி கே.கே.நகர் காவல் நிலையம் வழியாக கே.கே.நகர், உதயம் செல்லலாம்.  * அசோக் பில்லர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அசோக் நகர் 2வது அவென்யூ சாலை, ஜவஹர்லால் நேரு 100அடி சாலை, ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லலாம். * வடபழனி சந்திப்பிலிருந்து தி.நகர் நோக்கி செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி துரைசாமி சாலை, 2வது அவென்யூ சாலை, நேராக 8வது தெரு, 3வது அவென்யூவில் இடதுபுறம் திரும்பி 4வது அவென்யூ சந்திப்பு வழியாக செல்லலாம்.* கே.கே.நகரிலிருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக வரும் வாகனங்கள் ராஜமன்னார் சாலை- பி.டி. ராஜன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை, 2வது அவின்யூ செல்ல அனுமதி இல்லை.  மாறாக இடதுபுறம் திரும்பி ராஜமன்னார் சாலை, 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை சென்றடையலாம்.* வன்னியர் தெருவிலிருந்து ராஜமன்னார் சாலையில் வரும் வாகனங்கள் நேரே செல்ல அனுமதி இல்லை. மாறாக 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை சென்று செல்லவேண்டிய இடத்திற்கு செல்லலாம் அல்லது முனுசாமி சாலை வழியாக கே.கே.நகர், உதயம் வழியாக செல்லலாம்.* கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வடபழனி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் வரும் வாகனங்கள் வடபழனி சந்திப்பில் நேராக செல்ல அனுமதி இல்லை. இடதுபுறம் திரும்பி ஆற்காடு சாலை சென்று துரைசாமி சாலை வழியாக அசோக் பில்லர் நோக்கி நேராக செல்லலாம்.    * சாலிகிராமத்திலிருந்து கோடம்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஒருவழிப்பாதையில் வரும் போது பேருந்து மற்றும் வணிக வாகனங்கள் சாலையின் இடதுபுற ஓடுதளத்திலும், இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள்  அனைத்தும் சாலையின் வலதுபுற ஓடுதளத்தில்  செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் சாலையின் வலதுபுற ஓடுதளத்தில் செல்லக்கூடாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post கோடம்பாக்கம்-போரூர் இடையே மெட்ரோ ரயில் பணி நாளை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Gotambakkam- ,Porur ,Chennai ,Chennai Traffic Police Department ,Gotambakkam Power House ,Borur ,Gotambaka ,
× RELATED சென்னையில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை