×

கூடுதல் தளர்வுகளுடன் புதுவையில் வரும் 31வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரி: புதுவையில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலருமான விக்ராந்த் ராஜா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஆகஸ்ட் 15ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்து வருவதால், கூடுதல் தளர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதுடன், ஆக. 31ம் தேதி நள்ளிரவு வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது. இதன்படி, தினமும் இரவு 10.30 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொதுமுடக்கம் அமலில் இருக்கும். அனைத்து வித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக்கூடங்களுடன் கூடிய விடுதிகளில் இரவு 10 மணி வரை, 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். தேநீர் கடைகள், பழச்சாறு நிலையங்கள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கலாம். இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post கூடுதல் தளர்வுகளுடன் புதுவையில் வரும் 31வரை ஊரடங்கு நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : New New ,New Du ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...