×

பெகாசஸ் உளவு புகாரில் எழுந்த சர்ச்சைகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி

டெல்லி: பெகாசஸ் உளவு புகாரில் எழுந்த சர்ச்சைகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது. தற்போது 2 பக்கங்கள் கொண்ட பிராமண பத்திரத்தை ஒன்றிய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பெகாசஸ் விவகாரத்தில் பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரது அலைபேசிகளும் பெகாசஸ் செயலியை பயன்படுத்தி உளவுபார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. பொதுவாக இதுவொரு நாட்டிற்கு மட்டும் தான் இத்தகைய உளவுபார்க்கப்பட்ட விவகாரங்களை வழங்குவார்கள். தீவிரவாதம் உள்ளிட்டவற்றை அடக்குவதற்காக அரசுகளுக்கு மட்டும் தான் அந்த நிறுவனமானது தகவல்களை வழங்குவார்கள். ஆனால் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரது அலைபேசிகள் உளவுபார்க்கப்பட்டது ஒன்றிய அரசுக்கு தெரிந்து தான் நடந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் பத்திரிகையாளர்கள் என்.ராம், எடிட்டர்ஸ் பில்ட் என்ற அமைப்பு, மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் சார்பாக பொதுநல மனுக்கள், ரிட் மனுக்கள் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்தவாரம் வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் 2 பக்கங்களை கொண்ட பிரமாண பத்திரத்தை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளனர்.இந்த பெகாசஸ் சர்ச்சையில் எழுப்பப்பட்ட அத்தனை பிரச்சனைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக நிபுணர்கள் கொண்ட குழுவானது அமைக்கப்படும் என ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஆதாரமற்ற உறுதிப்படுத்தப்படாத முழுமையான தகவல்கள் எதுவும் இல்லாத அறிக்கைகள், ஊடங்கங்களில் வெளியான செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் எனவே இது அரசுக்கு எதிராக வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் தாங்கள் மறுப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இத்தகைய குழு அமைக்கப்பட வேண்டும் என்பதை காரணம்காட்டி தான் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். மழைக்கால கூட்டத்தொடர் கிட்டத்தட்ட தோல்வியில் தான் முடிந்தது. விவாதங்கள் ஏதும் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாலும் அமைதியான முறையில் மாநிலங்களவையும் மக்களவையும் நடக்கவில்லை. இந்த நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என்பதை முன்னதாகவே அரசு சார்பாக நீதிமன்றத்தில் சொல்லி இருந்தால் ஒருவேளை அமளி இல்லாமல் இருந்திருக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. ஆனால் தற்போது ஒன்றிய அரசு ஒரு நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்பதை அறிவித்துள்ளனர். தங்களுக்கு எதிராக வைக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுக்கவும் செய்துள்ளனர்….

The post பெகாசஸ் உளவு புகாரில் எழுந்த சர்ச்சைகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Supreme Court ,Delhi ,Pegasus ,Government of the Union ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...